Showing posts with label devi songs. Show all posts
Showing posts with label devi songs. Show all posts

Thursday, July 23, 2015

Maanika veenai aenthum

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி 
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் 
அம்மா பாட வந்தோம் அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தரவா நீ இங்கு வருவாய் நீ 
ஜெயம் தரும் வேணி அம்மா 

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் 
பூ மணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்  -- (மாணிக்க...)


வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள் 
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் 
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும் 
அள்ளி அறிவை தரும் அன்னையும் நீ 
வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி 
காணும் பொருளில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி 
நான்முகன் நாயகி மோகன ரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ 
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும் கான மனோகரி கல்யாணி 
அருள்வாய் நீ இசை தரவா நீ இங்கு வருவாய் நீ 
ஜெயம் தரும் வேணி அம்மா

Karpagavalli nin

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் 
நற்கதி அருள்வாய் அம்மா - தேவி...(கற்பக)
பற்பலரும் போற்றும் பதிமயிலாபுரியில் 
சிற்பம் நிறைந்த உயர் சிங்கார கோவில் கொண்ட... (கற்பக)

நீ இந்த வேளை தன்னில் சேயன் எனை மறந்தால் 
நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ 
ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள 
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா 

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறங்கி என்றும் 
நல்லாக்கி வைத்திடும் நாயகியே - நித்ய கல்யாணியே 
கல்யாணியே கபாலி காதல் புரியுமந்த உல்லாசியே 
உமா உன்னை நம்பினேன் அம்மா 

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனை காப்பாய் 
வாகேஸ்வரி மாயே வாராய் இது தருணம் 
பாகே ஸ்ரீ தாயே பார்வதியே இந்த 
லோகேஸ்வரி நீயே உலகினில் துணை அம்மா

அஞ்சனமயிடும் அம்பிகையே எம்பிரான் 
கொஞ்சி குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான் 
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா