Friday, July 24, 2015

mannaanalum thirchenduril

மண்ணானாலும் திருசெந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும்புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்  
பனிப்பூவானாலும் சரவணபொய்கை பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திருக்குறள் விளக்க பேச்சாவேன்
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் 
பழச் சுவையானாலும் பஞ்சமிர்த சுவையாவேன் 
அருள் முத்தானாலும் வீடும் பேரும் உண்டாவேன் 
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்

aayarpadi maaligaiyil

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் 
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ 
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ 

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு 
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ 
அந்த மந்திரத்தில் அவருரங்க மயக்கத்திலே இவன் உறங்க 
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ 

நாகர் பதம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடிய பின் 
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ 
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் 
யார் அவனை தூங்க விட்டார் ஆராரோ 

கண்ணன் அவன் தூங்கி விட்டால் காசினியே தூங்கிவிடும் 
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ 
அவன் பொன்னழகை பார்ப்பதற்கும் தோகை முத்தம் கேட்பதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ

Thursday, July 23, 2015

Maanika veenai aenthum

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி 
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் 
அம்மா பாட வந்தோம் அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தரவா நீ இங்கு வருவாய் நீ 
ஜெயம் தரும் வேணி அம்மா 

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் 
பூ மணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்  -- (மாணிக்க...)


வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள் 
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் 
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும் 
அள்ளி அறிவை தரும் அன்னையும் நீ 
வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி 
காணும் பொருளில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி 
நான்முகன் நாயகி மோகன ரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ 
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும் கான மனோகரி கல்யாணி 
அருள்வாய் நீ இசை தரவா நீ இங்கு வருவாய் நீ 
ஜெயம் தரும் வேணி அம்மா

Karpagavalli nin

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் 
நற்கதி அருள்வாய் அம்மா - தேவி...(கற்பக)
பற்பலரும் போற்றும் பதிமயிலாபுரியில் 
சிற்பம் நிறைந்த உயர் சிங்கார கோவில் கொண்ட... (கற்பக)

நீ இந்த வேளை தன்னில் சேயன் எனை மறந்தால் 
நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ 
ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள 
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா 

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறங்கி என்றும் 
நல்லாக்கி வைத்திடும் நாயகியே - நித்ய கல்யாணியே 
கல்யாணியே கபாலி காதல் புரியுமந்த உல்லாசியே 
உமா உன்னை நம்பினேன் அம்மா 

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனை காப்பாய் 
வாகேஸ்வரி மாயே வாராய் இது தருணம் 
பாகே ஸ்ரீ தாயே பார்வதியே இந்த 
லோகேஸ்வரி நீயே உலகினில் துணை அம்மா

அஞ்சனமயிடும் அம்பிகையே எம்பிரான் 
கொஞ்சி குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான் 
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா